தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

பெண் சிறைக்கைதிகள், அவர்களுடைய குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தல்

இடுகை இடப்பட்ட நாள்: 28 OCT 2026 12:11PM by PIB Chennai

பெண் சிறைக்கைதிகள், அவர்களுடைய குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக, 9 மத்திய அமைச்சகங்கள், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், நிர்வாகிகள், காவல்துறை தலைவர்கள் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினராக உள்ள பெண் கைதிகள், அவர்களுடைய குழந்தைகளின் உரிமைகள், தேவைகள் ஆகியவற்றுக்கு கூடுதல் கவனமும், பாலின ரீதியிலான அணுகுமுறையும் தேவை என்பதை தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

காவலில் உள்ளவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களுக்கு அப்பால், மனிதநேயமிக்க சிறைச்சூழல், தாய், குழந்தை ஆகியோருக்கான போதிய சுகாதார நலன் பராமரிப்பு, நீதிக்கான அணுகல், குடும்ப உறவுகளை பாதுகாத்தல், குழந்தைகளின் நலன்களை பாதுகாத்தல், சமூகத்தில் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான மறுவாழ்வு வாய்ப்புகள் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும் என்று ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

சிறையில் அடைப்பதற்கு முந்தைய நிலை, கைதுசெய்து சிறையில் அடைத்தல், சேர்க்கை விவரங்கள், குழந்தைகள் தொடர்பான தரவு, ஆவணப்படுத்துதல், உடல்நலன், மருத்துவப் பராமரிப்பு மற்றும் மனநல சேவைகள் உள்ளிட்டவற்றில் அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவுறுத்தல்களை https://nhrc.nic.in/flipbook/other_advisories/46 என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329351&reg=3&lang=1

***

SS/IR/LDN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2329477) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: Gujarati , English , Urdu , हिन्दी , Malayalam