சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜம்முவில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மண்டல மையத்தின் கட்டுமானப் பணிகள் குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் ஆய்வு

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 6:03PM by PIB Chennai

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள விஜய்பூரில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மண்டல மையத்தின் நிரந்தர வளாகக் கட்டுமானப் பணிகளை இன்று (2026 அக்டோபர் 27) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுமார் ரூ.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த நிரந்தர வளாகம், இப்பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவான மறுவாழ்வு சேவைகளையும், ஆதரவையும் வழங்கி அவர்களின் சுயசார்பு வாழ்க்கைக்கு உதவும் என அமைச்சர் தெரிவித்தார்.

கட்டுமானப் பணிகளை விரைந்து முடிப்பதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு வரும்போது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மறுவாழ்வு, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், ஆரம்பகால சிகிச்சைகள் ஆகிய வசதிகள் கிடைக்கும் என்றார். மேலும், பெற்றோர்களுக்கான பயிற்சிகள், பிரதமர் திவ்யாஷா மையம், கல்வி வாய்ப்புகள் போன்றவை இப்பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2329091&reg=3&lang=1

****

TV/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2329256) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी