மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் நாடாளுமன்ற அமைப்பின் முயற்சிகளுக்கு வலுசேர்ப்பதன் மூலம், உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளில் புத்தாக்கங்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும்: குடியரசு துணைத் தலைவர் திரு ராதாகிருஷ்ணன்

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 5:36PM by PIB Chennai

பிரிக்ஸ் நாடாளுமன்ற அமைப்பின் முயற்சிகளுக்கு வலுசேர்ப்பதன் மூலம், உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளில் புத்தாக்கங்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும் என்று  குடியரசு துணைத் தலைவர் திரு ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற 12-வது பிரிக்ஸ் நாடாளுமன்ற அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவின் ஜனநாயக நடைமுறை, அடித்தளத்திலிருந்து உச்ச நிலை வரை, காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

 

இந்தியாவில் ஜனநாயகம் என்பது புதிய கருத்து அல்ல என்பதை எடுத்துரைத்த அவர், வடக்கில் வைஷாலி போன்ற இடங்களில், ஜனநாயக நடைமுறை இருந்ததையும், தெற்கில் சோழ மன்னர்கள் 'குடவோலை' முறையைப் பின்பற்றியதையும், வரலாற்றின் சான்றுகளாகக் குறிப்பிட்டார்.

இத்தகைய ஆழமான வேர்களைக் கொண்ட பாரம்பரியம் காரணமாகவே, இந்தியா 'ஜனநாயகத்தின் தாய்' என்று போற்றப்படுவதாக அவர் தெரிவித்தார்.

12-வது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றத்தில் நடைபெறும் ஆலோசனைகளும், விவாதங்களும், உலகளவிலான சவால்களை ஒற்றுமை, பேச்சுவார்த்தைகள், பரஸ்பர நம்பிக்கையின் மூலம் எதிர்கொள்வதற்கான உறுப்பு மற்றும் நட்பு நாடுகளின் ஒருங்கிணைந்த  உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்னதாக பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள்,  தூதுக்குழுத் தலைவர்களுக்கு, திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று மதிய விருந்து அளித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329057&reg=3&lang=1

(Release ID: 2329057)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2329252) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , Marathi , हिन्दी