சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குவாஹாத்தியின் கானாபாராவில் தேசியக் கைவினைப் பொருட்கள் கண்காட்சி

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2026 8:08PM by PIB Chennai

குவாஹாத்தியின் கானாபாராவில் உள்ள ஃபார்ம் கேட் பகுதியில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் 'சில்ப் சமாகம் மேளா 2026' கண்காட்சி நடைபெற்று வருகிறது. அக்டோபர்  28 வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில், நாடு முழுவதிலும் இருந்து 31 பெண்கள் உட்பட 75 கைவினைஞர்கள் பங்கேற்று, சுமார் 40 வகையான பாரம்பரிய கைவினை மற்றும் கைத்தறி பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

 

கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கவும் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இங்கு அமைக்கப்பட்டுள்ள அமைச்சகத்தின் சிறப்பு அரங்கின் மூலம் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சார கலை நிகழ்ச்சிகளும் தினமும் நடைபெற்று வருகின்றன. இக்கண்காட்சிக்கு ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2328711&reg=3&lang=1

செய்தி அடையாள எண்:2328711

***

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2329150) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese