பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியின கௌரவ தினக் கொண்டாட்டம் நவம்பர் 1 முதல் 15 வரை நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 4:32PM by PIB Chennai

பழங்குடியின கௌரவ இருவார நிகழ்வை 2026 நவம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை நாடு முழுவதும் பழங்குடியினர் நல அமைச்சகம் கடைப்பிடிக்க உள்ளது. தார்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் பிறந்ததினமான பழங்குடியின கௌரவ தினத்தன்று இது நிறைவடையும். இந்த இருவார நிகழ்வு, அமைச்சகத்தின் முதன்மைத் திட்டங்களை விரைவுபடுத்துவதையும் அவற்றின் பயன்களைப் பழங்குடியினர் குடும்பத்தினருக்கு நேரடியாக கொண்டு சேர்ப்பதையும், பழங்குடியினர் சமூகத்தினர், மாணவர்களிடையே அரசின் திட்டங்கள், உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு முன்முயற்சியாகும்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் மத்திய அரசு தார்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் பிறந்ததினத்தைக் கொண்டாடும்  வகையில் 2021-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதியை பழங்குடியின கௌரவ தினமாக அறிவித்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328976&reg=3&lang=1

***

SS/IR/SM/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2329144) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati