தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கர்நாடகாவின் விஜயநகர மாவட்டத்தில், செல்பேசி இணைப்பின் தரத்தை டிராய் மதிப்பீடு செய்தது

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2026 4:26PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், பொது தொலைத்தொடர்பு நுகர்வோரின் தகவலுக்காக, ஆகஸ்ட் 2026 மாதத்தில் கர்நாடக உள்ளூர் சேவைப் பகுதியான விஜயநகர மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சுயாதீன கள ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் வழங்கும் செல்பேசி வலையமைப்புச் சேவைகளின் (குரல் மற்றும் தரவு) நிகழ்நேரத் தரத்தை மதிப்பீடு செய்து சரிபார்ப்பதே இந்தக் கள ஆய்வின் நோக்கமாகும். இந்த மதிப்பீட்டு முடிவுகள் நுகர்வோருக்குத் தெரிவிக்கப்படுவதுடன், சேவை வழங்குநர்கள் தங்களது சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கும் ஊக்கமளிக்கின்றன.

 

விஜயநகர மாவட்டத்தில், 2026 ஆகஸ்ட் 11 முதல் 14 வரை, நியமிக்கப்பட்ட முகமை மூலம் பல்வேறு சோதனைகளை டிராய் மேற்கொண்டது. இதில் 439.8 கி.மீ தொலைவிலான நகரப் பயணம், 13 முக்கிய இடங்கள், 7.6 கி.மீ நடைப்பயணச் சோதனை, 74 கி.மீ நெடுஞ்சாலைப் பயணம் ஆகியவை அடங்கும். இந்தச் சோதனைகள் பெங்களூருவில் உள்ள ட்ராய் மண்டல அலுவலகத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்டன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2328495&reg=3&lang=1

***

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2329121) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada