இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2026 3:56PM by PIB Chennai
இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் திரிசூல், மத்திய தரைக்கடலில் நடைபெற்று வரும் செயல்பாட்டுப் பணியின் ஒரு பகுதியாக, 2026 அக்டோபர் 25 அன்று இத்தாலியின் சிவிட்டாவெச்சியா துறைமுகம் சென்றடைந்தது.
முன்னதாக, இந்தக் கப்பல், இத்தாலி கடற்படைக் கப்பலான கார்லோ மார்கோட்டினியுடன் பயிற்சி மேற்கொண்டது. இந்தப் பயிற்சியில் ஒருங்கிணைந்த செயல்பாட்டுப் பயிற்சிகள், தகவல் தொடர்பு நடைமுறைகள், எரிபொருள் நிரப்பும் அணுகுமுறைகள், தளத்தின் குறுக்கே தரையிறங்குதல், பணியாளர் இடமாற்றங்கள் உள்ளிட்ட பயிற்சிகள் இடம்பெற்றன. இந்த வழித்தடப் பயிற்சி, இரு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையே, சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளவும், செயல்பாட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் வழிவகுத்தது.
இந்திய கடற்படைக் கப்பல் அந்நாட்டுத் துறைமுகம் சென்றடைந்தவுடன், தொழில்முறை கலந்துரையாடல்கள், கலாச்சாரப் பயணங்கள் மற்றும் பரிமாற்றங்கள் திட்டமிடப்பட்டன. இந்தியக் கடற்படையின் கடல்சார் மரபுகள், திறன்களுடன் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில், இந்தக் கப்பலைப் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது, இந்தியா - இத்தாலி இடையே நீடித்த கடல்சார் ஒத்துழைப்பை எடுத்துக் காட்டுவதுடன், தொழில்முறைத் தொடர்புகளையும், செயல்பாட்டு ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதில், அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக உள்ளது.
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328468®=3&lang=1
***
(Release ID: 2328468)
TV/SV/SH