ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமப்புற கைவினைஞர்கள் சங்கத்தின் பொருட்களுக்கான விற்பனை முகாம் (தேசிய சாரஸ் மேளா): தொழில்முனைவோராக உருவெடுத்த லட்சாதிபதி சகோதரிகளின் பயணங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2026 3:40PM by PIB Chennai

மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம், ஆந்திரப் பிரதேச மாநில அரசுடன் இணைந்து, நபார்டு, என்ஐஆர்டிபிஆர் மற்றும் குடும்பஸ்ரீ ஆகியவற்றின் ஆதரவுடன் கிராமப்புற கைவினைஞர்கள் சங்கத்தின் பொருட்களுக்கான விற்பனை முகாம் (தேசிய சாரஸ் மேளா), பாரம்பரிய கைவினைப் பொருட்கள், தொழில்முனைவு, மகளிருக்கு நிதி சுதந்திரத்தை வழங்கும் வகையில், மாற்றத்தை ஏற்படுத்தும் பயணங்களை நேரில் காண்பதற்கான  தளத்தை வழங்குகிறது.

புன்னமி காட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு விற்பனையகங்களுக்குப் பின், திறமைகள், கைவினைத் தொழில் மீதான நம்பிக்கை, 'லட்சாதிபதி சகோதரிகள்'  என்ற கனவை நனவாக்கிய ஒரு பெண் இருக்கிறார். இந்த முகாம் நடைபெறும் நாட்களில், சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், தங்களது குடும்பத் தொழிலையோ அல்லது ஒரு புதிய யோசனையையோ எவ்வாறு ஒரு முழுமையான வர்க்கமாக மாற்றியமைத்தனர் என்பதைப் பகிர்ந்து கொள்கின்றனர். பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட விதம், தயாரிப்புகளை வரவேற்ற நகரங்கள், மற்றும் ஒவ்வொரு அடியிலும் அவர்கள் பெற்ற தன்னம்பிக்கை என பல்வேறு  விஷயங்களை அவர்கள் விவரிக்கின்றனர். இவர்களில் சிலரது ஆண்டு வருமானம் ₹60 லட்சம் முதல் ₹1 கோடி வரை உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328458&reg=3&lang=1 

***

(Release ID: 2328458)

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2329114) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Telugu