இடுகை இடப்பட்ட நாள்:
27 OCT 2026 12:24PM by PIB Chennai
மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை அனுமதி அடிப்படையிலான கட்டமைப்பிலிருந்து நம்பிக்கை அடிப்படையிலான ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு மாறுவதற்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புத்தொழில் சூழல், இணக்க நடைமுறைகளைக் குறைத்தல், துறைசார் ஒழுங்குமுறை, நேரடி அன்னிய முதலீடு, ஒற்றைச் சாரள அனுமதி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள், வணிகங்கள் மீதான ஒழுங்குமுறை சுமையைக் குறைத்துள்ளன. அத்துடன் வணிகங்களின் தொடக்கம், வேலைவாய்ப்பு, முதலீடு, டிஜிட்டல் சேவை அளித்தல் ஆகியவற்றில் சிறந்த பலன்கள் ஏற்பட்டுள்ளன.
தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை இதுவரை 2,50,046 புத்தொழில் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. அவை 770-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 56 தொழில்துறைகளில் 25.42 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளன. இந்த புத்தொழில் நிறுவனங்களில் 52 சதவீதம் பெருநகரங்கள் அல்லாதவை ஆகும். 48 சதவீத நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒருவர் பெண் இயக்குநராக உள்ளார். 2023-24-ம் நிதியாண்டில் 34,200 புத்தொழில் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட நிலையில் 2024-25-ம் நிதியாண்டில் 36,440 நிறுவனங்களாக அதிகரித்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328842®=3&lang=1
***
SS/IR/SM/SU