இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2026 8:34PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் நாடாளுமன்ற அமைப்பின் 12-வது அமர்வின் போது, பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில், பிரதமரும், இந்தியா வந்துள்ள பிரிக்ஸ் உறுப்பு நாடுகளை சேர்ந்த நாடாளுமன்றப் பிரதிநிதிகளும், பல்வேறு விவகாரங்கள் குறித்து பரஸ்பரம் தங்களது கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"தில்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றத்தின் 12-வது அமர்வின் போது, உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மிகச் சிறந்த முறையில் கலந்துரையாடினேன். பல்வேறு விவகாரங்கள் குறித்து நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம்."
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2328729®=3&lang=1
(Release ID: 2328729)
****
TV/SV/SH