சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2026 6:26PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா, போதைப்பொருள் மீட்புச் சேவைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், சுகாதார நிபுணர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தை, புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். அமைச்சகத்தின் செயலாளர், அதிகாரிகள், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில், இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய திரு. நட்டா, போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு, பல்வேறு அமைச்சகங்களும் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையிலான, ஒட்டுமொத்த அரசையும் உள்ளடக்கிய ஒரு கூட்டு அணுகுமுறை தேவை என்று வலியுறுத்தினார். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மீட்பு மையங்களுக்கு, தகுந்த பயிற்சி, நிறுவன ரீதியான ஆற்றல், போதுமான நிதி ஆதாரங்களை வழங்குவதன் மூலம் ஆதரவளிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் கோடிட்டுக்காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2328634®=3&lang=1
****
TV/BR/SH