இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2026 1:46PM by PIB Chennai
இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த விண்வெளிப் பயணங்களை ஊக்குவிக்கவும் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் முக்கிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. ஆராய்ச்சி மேம்பாடு, புத்தாக்க நிதியின் (ஆர்டிஐ) கீழ், மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள மானஸ்து விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு ரூ.116 கோடி நிதியுதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ரூ.277.63 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டம், செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகளுக்கான ஒருங்கிணைந்த பசுமை உந்துவிசை அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வழக்கமான உந்துவிசைப் பொருட்களுக்கு மாற்றாக, ஹைட்ரஜன் ஃபெராக்சைடு அடிப்படையிலான பாதுகாப்பான பசுமை எரிபொருளைப் பயன்படுத்தி விண்வெளிப் பயணங்களுக்கான செலவைக் குறைக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் இந்நிறுவனம் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.
விண்வெளித் துறையில் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, உள்நாட்டுத் தயாரிப்புத் திறனை வலுப்படுத்துவதற்கு இத்திட்டம் உதவிகரமாக இருக்கும் என தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் பதக் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328399®=3&lang=1
****
TV/PD/SH