இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2026 6:57PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, அக்டோபர் 27, 2026 அன்று மாலை 5:30 மணிக்கு புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
அக்டோபர் 27 முதல் 29 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்மாநாட்டில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க முன்னுரிமைகள் குறித்து விவாதிப்பதற்காக, முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவு, உயிரித் தொழில்நுட்பம், மேம்பட்ட பொருட்கள், உற்பத்தி, சுகாதாரம், எரிசக்தி, பருவநிலை மற்றும் கடல்சார் அறிவியல் உள்ளிட்ட 12 கருப்பொருள்களில் விவாதங்கள் நடைபெறவுள்ளன. ஆராய்ச்சி முன்னுரிமைகள், தேசியத் திறன்கள், அறிவியல் முன்னேற்றம் சார்ந்த திட்டங்களை நடைமுறைப் பயன்பாடுகளாக மாற்றுவது ஆகியவற்றில் விவாதங்கள் நடைபெறவுள்ளன.
இந்த மாநாட்டில், உள்நாட்டு அறிவியல் சாதனைகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்தும் விதமாக, விரிவான தொழில்நுட்பம், புத்தாக்கக் கண்காட்சியும் இடம் பெறுகிறது. இதில், 150 டீப்-டெக் புத்தொழில் நிறுவனங்களின் அரங்குகள் இடம்பெறும், அவை தொழில்நுட்ப மேம்பாடுகளையும், பல்வேறு துறைகளில் அவற்றின் சாத்தியமான பயன்பாடுகளையும் எடுத்துக் காட்டும் வகையில் இருக்கும்.
இந்த மாநாட்டில், அறிவியல் மேம்பாடு, அவற்றின் நிகழ்நேர பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக,கருப்பொருள் சார்ந்த காணொளிகள், தொழில்நுட்ப செயல் விளக்கங்கள், ஆவணப்படங்கள், தகவல் மையங்கள், நவீன மற்றும் மெய்நிகர் காட்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
குளோபல் கனெக்ட் நெட்வொர்க்கிங் நிகழ்வு என்ற ஒரு புதிய முன்முயற்சி, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள கல்வித்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறையைச் சேர்ந்த 300-க்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர். இது சர்வதேச ஆராய்ச்சி, தொழில்துறை-கல்வித்துறை போன்றவைகளில் ஒத்துழைப்பு, புதிய கண்டுபிடிப்புகளை மக்களிடையே கொண்டு செல்வதற்கான வழிவகைகள் குறித்தும் ஆய்வு செய்வதற்கான தளத்தை இந்த மாநாடு வழங்கும்.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2328654®=3&lang=1
(Release ID: 2328654)
****
TV/SV/SH