சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
தேசிய வெளிநாட்டு உதவித்தொகை மூலம் உயர்கல்வியில் சாதித்த மாணவி
இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2026 3:07PM by PIB Chennai
தரமான உயர்கல்வி கற்க வேண்டும் என்பது பெரும்பாலான மாணவ, மாணவிகளின் கனவாக இருந்து வருகிறது. இந்நிலையில், 26 வயதான யுக்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி தரமான உயர்கல்வி பயில வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார். பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த பட்டியலின மாணவி யுக்தியால், உயர்கல்விக்கு செலவிட முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், மத்திய அரசின் தேசிய வெளிநாட்டு உதவித்தொகை திட்டத்தின்கீழ் யுக்தி விண்ணப்பம் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து, அவருக்கு வெளிநாட்டில் படிக்க தேவையான நிதி, பராமரிப்பு நிதி ஆகியவை வழங்கப்பட்டன. இதன்மூலம் வெளிநாட்டில் உயர்கல்வி முடித்த யுக்தி, பொருளாதரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தருகிறார். தனது கனவு நனவானதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328432®=3&lang=1
****
TV/LN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2328677)
வருகையாளர் எண்ணிக்கை : 5