சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு ஜெ பி நட்டா தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2026 4:22PM by PIB Chennai

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் 2026 கடைபிடிக்கப்படுவதையொட்டி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில், புதுதில்லியில் உள்ள கர்த்தவ்ய பவனில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சகத்தின் அதிகாரிகள் உறுதிமொழியை ஏற்றனர். இதில் இணையமைச்சர்கள் திரு பிரதாப்ராவ் ஜாதவ், திருமதி அனுப்பிரியா படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிற அதிகாரிகள் தங்களது அலுவலகங்களில் இருந்து காணொலி வாயிலாகப் பங்கேற்றனர்.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் இந்த விழிப்புணர்வு வாரம், நடப்பாண்டில், அக்டோபர் 26 முதல் நவம்பர் 1 வரை 'செழிப்பிற்காக நேர்மை' என்ற கருப்பொருளில் அனுசரிக்கப்படுகிறது. பொது நிர்வாகத்தில் நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை நிலைநிறுத்துவதோடு ஊழலற்ற பொது சேவையை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை இந்த நிகழ்வு மீண்டும் வலியுறுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328490&reg=3&lang=1

***

TV/PD/SH   

 


(வெளியீட்டு அடையாள எண்: 2328658) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी