கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொரியப் பயணத்தின்போது கப்பல் கட்டுமானத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 25 OCT 2026 8:27PM by PIB Chennai

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை  அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், நான்கு நாள் பயணமாக தென் கொரியா சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது, கப்பல் கட்டுமானத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், கொரியத் தொழில் நிறுவனங்களிடம் இந்தியாவின் கடல்சார் வாய்ப்புகளை அவர் எடுத்துரைக்கிறார். 2047-ம் ஆண்டிற்குள் உலகின் முதல் ஐந்து கப்பல் கட்டுமான நாடுகளில் ஒன்றாக இந்தியா மாற வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைந்துள்ளது.

கொரியாவின் கடல்சார் தொழில்துறையின் மையமாகத் திகழும் புசானில் கொரியக் கப்பல் கட்டுமானத் துறையில் பணியாற்றும் இந்திய வல்லுநர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார். இந்தியாவுக்கு கப்பல் வடிவமைப்பாளர்கள், கடல்சார் பொறியாளர்கள், திட்ட மேலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுவார்கள் என்று திரு சோனோவால் கூறினார். எனவே, தொழில் வல்லுநர்கள் தங்கள் கொரிய அனுபவத்தை இந்தியாவிற்கு எடுத்து வர வேண்டும் அல்லது கொரியாவிலிருந்து இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இளம் இந்தியத் தொழில் வல்லுநர்களுக்கு வழிகாட்டுமாறும், இந்தியக் கப்பல் தொழில்நுட்ப மையத்திலும், இந்தியாவுக்கும் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகமைக்கும் இடையிலான கப்பல் கட்டும் திறன் கூட்டாண்மையிலும் பங்கேற்குமாறும் அமைச்சர் அழைப்புவிடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328265&reg=3&lang=1

***

SK/BK/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2328375) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese