சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சமூக நீதி அமைச்சகத்தின் சார்பில் குவஹாத்தியில் கைவினைப்பொருட்கள் கண்காட்சி - உள்ளூர் மக்களிடையே அமோக வரவேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 25 OCT 2026 7:03PM by PIB Chennai

குவஹாத்தியில் மத்திய சமூக நீதி அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்று வரும் ஷில்ப் சமகம் மேளா எனப்படும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி, உள்ளூர் மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் பல ஆயிரம் பார்வையாளர்கள், இந்தியாவின் வளமான, பன்முகத்தன்மை வாய்ந்த பாரம்பரிய கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்களின் மரபைக் கண்டுகளித்தனர்.

அக்டோபர் 21 அன்று தொடங்கிய இந்த கண்காட்சி, அசாம் மாநிலத் தலைநகரான குவஹாத்தியில் தொடர்ந்து 5 -வது நாளாக பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது . இதில், பல்வேறு வகையான தனித்துவமான, வண்ணமயமான கைவினை, கைத்தறிப் பொருட்களை வாங்குவதற்காக பார்வையாளர்கள் திரண்டு வருவதால், அரங்க உரிமையாளர்கள் நல்ல வருமானத்தை ஈட்டுகின்றனர். குவஹாத்தியில் உள்ள கானாபாரா, ஃபார்ம் கேட்டில் 8 நாட்கள் நடைபெறும் ஷில்ப் சமகம் மேளா 2026 எனப்படும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி, காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்திருக்கும்.

இது 2026-27 நிதியாண்டில் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்படும் இரண்டாவது நிகழ்வாகும். இது குறித்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த மேளா வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நாடு முழுவதிலுமிருந்து கைவினைஞர்களை ஒன்றிணைக்கிறது என்றும் தெரிவித்தார். இது அக்டோபர் 28 புதன்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்  குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328248&reg=48&lang=1

****

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2328264) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese