ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் சரக்கு ரயில்களில் நிலக்கரி கொண்டு செல்வதில் இந்திய ரயில்வே புதிய வரலாற்றுச் சாதனை

இடுகை இடப்பட்ட நாள்: 22 OCT 2026 5:45PM by PIB Chennai

சரக்கு ரயில்களில் நிலக்கரி கொண்டு செல்வதில் இந்திய ரயில்வே புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. 2026 அக்டோபர் 18 வரையிலான காலகட்டத்தில், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 22.5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களுக்குத் தடையின்றி நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், 2025 அக்டோபரை விட நாள் ஒன்றுக்குக் கூடுதலாக 87 சரக்கு ரயில்களில் நிலக்கரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் பாதியில், அனல் மின் நிலையங்களுக்கு நாள் ஒன்றுக்குச் சராசரியாக 430 சரக்கு ரயில்கள் மூலம் நிலக்கரியை இந்திய ரயில்வே அனுப்பி வைத்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 7.1 சதவீத வளர்ச்சியாகும். தொழில் துறை உற்பத்தி அதிகரிப்பு, சில பகுதிகளில் போதிய மழையின்மை காரணமாக மின் நுகர்வும், நிலக்கரி தேவையும் அதிகரித்துள்ள நிலையில் இச்சாதனை எட்டப்பட்டுள்ளது.

மின் நிலையங்களில் போதுமான நிலக்கரி இருப்பைப் பராமரித்து தடையற்ற மின்சார உற்பத்தியை உறுதி செய்ய மத்திய நிலக்கரி அமைச்சகம், மின்துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய ரயில்வே செயல்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326711&reg=3&lang=1

***

SK/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2328247) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Kannada