இடுகை இடப்பட்ட நாள்:
22 OCT 2026 9:50PM by PIB Chennai
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் ஓட்டம் எஸ்7 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தேஜஸ் நந்தகுமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது விடாமுயற்சி, கடின உழைப்பு, செயல்திறனை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்பு ஆகியவை பாராட்டத்தக்கவை என்று குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 100 மீட்டர் ஓட்டத்தில் பேக்ஸ்ட்ரோக் எஸ்7 பிரிவில் தேஜஸ் நந்தகுமார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். தனது செயல்திறனை மேம்படுத்துவதில் அவர் காட்டிய விடாமுயற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவை பாராட்டத்தக்கவை. இந்தச் சாதனைக்காக தேஜஸுக்குப் பாராட்டுகள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்"
***
(Release ID: 2326998)
SK/PLM/RJ