வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நகர்ப்புற மாநாடு புவனேஸ்வரில் நிறைவடைந்தது - மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 25 OCT 2026 3:42PM by PIB Chennai

2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை நோக்கி நகர்ப்புற நிர்வாகம், திட்டமிடல், சேவை வழங்கலை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளுடன், தேசிய நகர்ப்புற மாநாடு 2026 இன்று (25.10.2026) புவனேஸ்வரில் நிறைவடைந்தது.

இதில் நிறைவுரையாற்றிய மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால், நகர்ப்புற வளர்ச்சி, நகர்ப்புற உள்கட்டமைப்பு, சேவைகளை வலுப்படுத்துவது ஆகியவற்றில் மத்திய அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து எடுத்துரைத்தார். நமது நகரங்களின் எதிர்கால சவால்கள் குறித்து விவாதிப்பதே இந்த மாநாட்டின் நோக்கம் என்று குறிப்பிட்ட அவர், அம்ருத், தூய்மை இந்தியா உள்ளிட்ட தேசியத் திட்டங்கள் சேவைகளை விரிவுபடுத்துதல், கழிவு மேலாண்மையை மேம்படுத்துதல், நகர்ப்புறப் போக்குவரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் எட்டப்பட்ட முன்னேற்றங்களை எடுத்துரைத்தார்.

மாநாட்டின் நிறைவு விழாவில் வரவேற்புரை ஆற்றிய நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு சதேந்திர சிங், ஏழு தொழில்நுட்ப அமர்வுகளின் முக்கிய முடிவுகளைப் பற்றி எடுத்துரைத்ததோடு, கொள்கை ரீதியான கலந்துரையாடல்களை நடைமுறைக்கு உகந்த, தீர்வுகளாக மாற்றுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

சிறப்புரையாற்றிய நித்தி ஆயோக் உறுப்பினர் திரு ராஜீவ் கௌபா, இந்தியாவின் வேகமாக அதிகரித்து வரும் நகர்ப்புற மாற்றத்தை நிர்வகிப்பதற்கு, நகர்ப்புற நிர்வாகம், திட்டமிடல், நகராட்சி நிதி ஆகியவற்றில் விரிவான சீர்திருத்தங்கள் தேவை என்பதை வலியுறுத்தினார்.

இரண்டு நாள் தேசிய நகர்ப்புற மாநாடு 2026-ல் இருந்து வெளிவந்த பரிந்துரைகள், வலுவான நிறுவனத் திறன், ஒருங்கிணைந்த திட்டமிடல், நிலையான நிதி, பொறுப்புணர்வுடன் கூடிய சேவை வழங்கல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, நகர்ப்புற சீர்திருத்தங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328185&reg=3&lang=1&_gl=1

****

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2328217) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu