புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
25 OCT 2026 11:42AM by PIB Chennai
புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், அதன் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்களுடன் இணைந்து, சிறப்பு தூய்மை இயக்கம் 6-ஐ தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.
தூய்மை, திறமையான ஆவண மேலாண்மை, அலுவலக இடத்தின் உகந்த பயன்பாடு, நிலுவையில் உள்ள பணிகளைத் நிறைவு செய்தல் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில் ஏறக்குறைய 60 முதல் 70% முன்னேற்றத்தை அவை அடைந்துள்ளன.
முக்கிய நடவடிக்கைகளாக அலுவலகங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது; பதிவேடுகளை மதிப்பாய்வு செய்து தேவையற்றவற்றை நீக்குவது, உபரிப் பொருட்களை அகற்றுவது, உரிய வழிகாட்டுதல்களின்படி மின்னணுக் கழிவுகளைக் கண்டறிந்து அப்புறப்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.
அக்டோபர் 31- ஆம் தேதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கும் , அதன் பிறகும் தூய்மை, பொறுப்புணர்வு, திறமையான பணியிட மேலாண்மை ஆகிய பண்பாடுகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328141®=48&lang=1
****
AD/PLM/RJ