இடுகை இடப்பட்ட நாள்:
24 OCT 2026 8:07PM by PIB Chennai
பீகாரின் தொழில் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன், தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுக் கழகம் (என்ஐசிடிசி) ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. மாநில துணை முதலமைச்சர் திரு சம்ராட் சௌத்ரி, புத்தகயாவில் பீகார் ஒருங்கிணைந்த உற்பத்தி நகரம் கயா லிமிடெட்டை முறைப்படி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக, ஐஎம்சி காயா பகுதியில் சுமார் 300 ஏக்கர் தொழில் நிலத்திற்காக, முதலீட்டாளர்களுடன் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. சுமார் ரூ. 4,200 கோடி மதிப்பிலான முதலீடுகளை உள்ளடக்கியுள்ள இந்த ஒப்பந்தங்கள் மூலம் 16,095 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதலீடுகள் உணவு பதப்படுத்துதல், வாகன உதிரிபாகங்கள், மருத்துவப் பொருட்கள், மருந்துகள், பிற உற்பத்தித் துறைகளைச் சார்ந்தவை ஆகும்.
இந்த நிகழ்வில் ஜப்பான், தாய்லாந்து, லாவோஸ் நாடுகளின் தூதர்கள், தூதரகங்களின் மூத்த பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள், என்ஐசிடிசி மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 250 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328067®=48&lang=2
***
SK/RB/RJ