வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
24 OCT 2026 7:17PM by PIB Chennai
தேசிய நகர்ப்புற மாநாட்டின் இரண்டாவது பதிப்பை, ஒடிசாவின் புவனேஸ்வரில், நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு டோகன் சாஹு தொடங்கி வைத்தார். இன்றும் நாளையும் (2026 அக்டோபர் 24-25) நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டை, மத்திய நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு ஒடிசா மாநில அரசு ஆதரவளிக்கிறது.
'நகர்ப்புற வளர்ச்சி - நகர்ப்புற அமைப்புகள், தீர்வுகள், செயலாக்கத்தை மறு ஆய்வு செய்தல்' என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர்கள், மேயர்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வித்துறையினர், தொழில்துறையினர் உட்பட 1,200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தொடக்க அமர்வின் போது பேசிய மத்திய இணையமைச்சர் திரு டோகன் சாஹு, இந்தியாவில் நகர்ப்புற மக்கள்தொகை 2011-ல் சுமார் 377 மில்லியனில் இருந்து சுமார் 500 மில்லியனாக வளர்ந்துள்ளது எனவும், இது 2036-க்குள் 600 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் கூறினார். இந்தியாவின் சுதந்திர நூற்றாண்டு விழாவின் போது, ஏறக்குறைய இரண்டு இந்தியர்களில் ஒருவர் நகரத்தில் வசிப்பார்கள் என்று அவர் தெரிவித்தார். இந்தச் சூழலில் மத்திய அரசின் திட்டங்கள், நகர்ப்புற வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி பேசுகையில், ஒடிசா மாநிலம் திட்டமிட்ட நகரமயமாக்கல், நவீன உள்கட்டமைப்பு, நிலையான போக்குவரத்து ஆகியவற்றை நோக்கி நகர்கிறது என்றார்.
நித்தி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி திரு அனுராக் ஜெயின், தமது சிறப்புரையில், இந்தியாவின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, மாநில அரசுகளுடன் உரையாடலை நிறுவனமயமாக்குவதும், ஈடுபாட்டைத் தொடர்வதும் முக்கியம் என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328052®=3
****
SK/PLM/RJ