இடுகை இடப்பட்ட நாள்:
23 OCT 2026 10:15PM by PIB Chennai
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டனில் எஸ்எல்3-எஸ்யு5 கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிதேஷ் குமார், துளசிமதி முருகேசன் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த பதிப்பில் வெண்கலப் பதக்கம் வென்று, இம்முறை வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது ஒரு பாராட்டத்தக்க சாதனை என்று கூறியுள்ள திரு நரேந்திர மோடி, அவர்கள் தொடர்ந்து சிறந்து விளையாட வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்துள்ளதோடு, இனிவரும் காலங்களில் இன்னும் பல வெற்றிகளைப் பெற நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் எஸ்எல்3-எஸ்யு5 கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்ற நிதேஷ் குமார், துளசிமதி முருகேசன் ஆகியோருக்கு வாழ்த்துகள்!
முந்தைய பதிப்பில் வெண்கலப் பதக்கத்திலிருந்து இம்முறை வெள்ளிப் பதக்கத்திற்கு முன்னேறியிருப்பது ஒரு பாராட்டத்தக்க சாதனையாகும். அவர்கள் தொடர்ந்து சிறந்து விளங்கி, நாட்டிற்கு மேலும் பல பெருமைகளைக் கொண்டுவரட்டும். இனிவரும் காலங்களில் இன்னும் பல வெற்றிகள் கிடைக்க நல்வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi"
****
(Release ID: 2327729)
AD/PLM/RJ