பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிர்வாக சீர்திருத்தங்கள், பொது குறைதீர்ப்பு துறை, பொதுப் பாதுகாப்பு, ஊரக மேம்பாட்டில், தொழில்நுட்பம் சார்ந்த ஆளுகை குறித்த இணையவழிக் கருத்தரங்கு

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2026 5:25PM by PIB Chennai

நிர்வாக சீர்திருத்தங்கள், பொதுக் குறைதீர்ப்புத் துறை, 2026 அக்டோபர் 23 அன்று 22-வது தேசிய மின்-ஆளுகை இணையவழிக் கருத்தரங்கிற்கு  ஏற்பாடு செய்தது. அத்துறையின் இணைச் செயலாளர் திரு அவனிஷ் குமார் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற இந்த இணையவழிக் கருத்தரங்கில், தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாக நடைமுறைகளைப்  பகிர்ந்துகொள்வதற்காக மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், மாவட்டங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கோயில், புனிதத் தல மேலாண்மை அமைப்புகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த இணையவழிக் கருத்தரங்கில், 2026-ம் ஆண்டுக்கான தேசிய மின்-ஆளுகை விருதுகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட, தங்க விருது வென்ற இரண்டு முன்முயற்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஷ்வர் கோயில் உட்பட, மகாகால் ருத்ரசாகர் ஒருங்கிணைந்த மேம்பாட்டுப் பகுதியின் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான காணொளிக் கண்காணிப்பு அமைப்பான திரிநேத்ரா, மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் தலைமையில், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தரவு சார்ந்த ஆளுகையான பஞ்சாயத்து முன்னேற்றக் குறியீடு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327457&reg=3&lang=1    

***

SK/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2328039) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी