அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

தூய்மைப் பராமரிப்பிற்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ், அறிவியல் பூர்வ கழிவு மேலாண்மை, நீடித்த தோட்டக்கலை நடைமுறைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2026 4:55PM by PIB Chennai

தூய்மைப் பராமரிப்பிற்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் ஒரு பகுதியாக, புனேவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவனம் (ஏ.ஆர்.ஐ), தனது வளாகம் முழுவதும் அறிவியல் பூர்வமான இயற்கை கழிவு மேலாண்மை, ஊட்டச்சத்து மறுசுழற்சி, பசுமை இடங்களின் நிலையான பராமரிப்பை ஊக்குவித்து வருகிறது.

இந்த நிறுவனம், உதிர்ந்த இலைகள் மற்றும் தோட்டக் கழிவுகளிலிருந்து ஆண்டுதோறும் 6,000 கிலோ உரத்தை உற்பத்தி செய்து, அவற்றை தனது தோட்டங்களில் பயன்படுத்தி வருகிறது. இந்த முயற்சி, இயற்க்கை கழிவுகளை மதிப்புமிக்க மண் வளமாக  மாற்றுவதுடன், வளப் பாதுகாப்பை ஊக்குவிக்கிறது.

மேலும், இயற்கைப் பொருட்களையும், ஊட்டச்சத்துக்களையும் மண்ணுக்குத் திருப்பி அளிப்பதன் மூலம், சுழற்சி அடிப்படையிலான பொருளாதார கொள்கைகளின் நடைமுறைப் பயன்பாட்டையும் நிரூபிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327414&reg=3&lang=1   

***

SK/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2328034) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी