இடுகை இடப்பட்ட நாள்:
20 OCT 2026 9:54PM by PIB Chennai
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் குண்டு எறிதல் எஃப்56/எஃப்57 பிரிவில் சிறப்பான செயல்திறனுடன் வெண்கலப் பதக்கம் வென்ற ஹொகாடோ ஹொடோசே சேமாவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.
தம்முடைய முந்தைய போட்டியிலிருந்த தனது செயல்திறனை மேம்படுத்தி சிறந்த ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் அவர் இப்போட்டியில் வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட திரு மோடி, நாட்டிற்கு அவர் தொடர்ந்து பெருமை சேர்க்க வாழ்த்துத் தெரிவித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் குண்டு எறிதல் எஃப்56/எஃப்57 பிரிவில் சிறப்பான செயல்திறனுடன் ஹொகாடோ ஹொடோசே சேமா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவர் தம்முடைய முந்தைய போட்டியிலிருந்து அவரது செயல்திறனை மேம்படுத்தி சிறந்த ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார், அவருக்கு வாழ்த்துகள். அவர் இந்தியாவை தொடர்ந்து பெருமைப்படுத்தட்டும்."
***
(Release ID: 2325620)
SS/IR/RJ/SH