பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரமோத்திற்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2026 7:14PM by PIB Chennai

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 1500 மீட்டர் டி46  பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரமோத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

முந்தைய போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கத்தை மீண்டும் வென்றது ஒரு சிறந்த சாதனை என்று குறிப்பிட்ட திரு மோடி, அவர் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு, தனது விளையாட்டுப் பயணத்தின் மூலம் மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

 

“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 1500 மீட்டர் டி46 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரமோத்திற்கு வாழ்த்துகள்! முந்தைய போட்டியில் வென்ற அதே வெள்ளிப் பதக்கத்தை மீண்டும் வென்றிருப்பது ஒரு சிறந்த சாதனையாகும். அவர் தனது விளையாட்டுப் பயணத்தைத் தொடர்ந்து சிறப்பாக முன்னெடுத்துச் சென்று, மற்றவர்களுக்கும் ஊக்கமளிக்க வாழ்த்துகிறேன்: பிரதமர் @narendramodi

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2327573&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2327647) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , Marathi , हिन्दी , Gujarati , Kannada , Malayalam