இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 6:50PM by PIB Chennai
செயற்கை போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான ஒரு முக்கிய நடவடிக்கையாக, வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள் அக்டோபர் 20, அன்று போபாலில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முனையத்தில் (ஐஎஸ்பிடி) 9.139 கிலோ மெத்தம்பெட்டமைனைக் கைப்பற்றியதுடன், ஒருவரைக் கைது செய்துள்ளனர். உளவுத்துறையிடமிருந்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தில்லியிலிருந்து பெங்களூருவுக்கு பேருந்தில் பயணித்த ஒரு இந்திய ஆண் பயணியை, போபால் ஐஎஸ்பிடி-ல் டிஆர்ஐ அதிகாரிகள் இடைமறித்தனர். பயணியின் உடமைகளை சோதனையிட்டதில், 9.139 கிலோ எடையுள்ள, படிக வடிவ மெத்தம்பெட்டமைன் அடங்கிய 11 பிளாஸ்டிக் பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம், 1985-ன் கீழ் மெத்தம்பெட்டமைன் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட பயணி கைது செய்யப்பட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326107®=3&lang=1
***
SK/BR/SH