புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு அட்டவணை, மதிப்பீட்டு நடைமுறைகளில் மாற்றம்: பொதுமக்களிடமிருந்து கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2026 12:14PM by PIB Chennai

மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் அலுவலகம் 2017-ம் ஆண்டு முதல் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. தொழிலாளர் சந்தை தொடர்பான தரவுகளை உடனுக்குடன் வழங்கும் வகையில், 2027 ஜனவரி முதல் இக்கணக்கெடுப்பின் மாதிரி வடிவமைப்பு, மதிப்பீட்டு நடைமுறைகளில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் வளர்ந்து வரும் டிஜிட்டல் தளப் பணியாளர்களைக் (கிக் தொழிலாளர்கள்) கணக்கெடுப்பதற்கென புதிய மாதிரிப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நகர்ப்புற, ஊரகப் பகுதிகளில் புதிய நிர்வாக எல்லை மாற்றங்கள், மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட மாதிரி கட்டமைப்பு பயன்படுத்தப்படவுள்ளது. ஊதியமில்லா குடும்பப் பணிகள், பராமரிப்புப் பணிகள், தன்னார்வத் தொண்டு உள்ளிட்ட செயல்பாடுகளை 15 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் ஆரம்பத்திலேயே கணக்கிடுவதற்கான புதிய கேள்விகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இம்மாற்றங்கள் குறித்த விவரக் குறிப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் இத்திருத்தங்கள் குறித்த தங்களது ஆலோசனைகள், கருத்துகளை இச்செய்தி வெளியான 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327153&reg=3&lang=1&_gl=1

***

SS/PD/SH  

 


(வெளியீட்டு அடையாள எண்: 2327577) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati