தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
23 OCT 2026 2:15PM by PIB Chennai
மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தகவல் தொடர்பு மேம்பாட்டு மையம், வாரணாசியில் உள்ள ஐஐடி-ல், அதி நவீன தலைமுறை தகவல்தொடர்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தகவல் தொடர்பு துறையில் மேற்கொள்ளப்படும் கூட்டு ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான பிரத்யேக தளத்தை உருவாக்குவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். வாரணாசியில் உள்ள ஐஐடி-ல் அமைய உள்ள புதிய மையத்தின் மூலம், மேம்படுத்தப்பட்ட 5ஜி, 6ஜி, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு, கம்பியில்லா மேம்பட்ட அமைப்பு ஆகியற்றில் கவனம் செலுத்த திட்டமிடப்பட்ள்ளது. ‘தொலைதொடர்பு துறை ஆராய்ச்சியில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு உறுதுணையாகவும், தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியா தன்னிறைவை அடையவும் இந்த மையம் உறுதுணையாக இருக்கும் என வாரணாசி ஐஐடி இயக்குனர் அமித் பத்ரா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327317®=3&lang=1&_gl=1
***
SS/LN/SH