மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
23 OCT 2026 3:58PM by PIB Chennai
வாழ்வாதார மேம்பாடு, மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு, நன்னீர் வளங்களின் சிறந்த மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, உள்நாட்டு சிறு அளவிலான மீன்பிடித் தொழிலுக்கான ஒரு தனி தேசிய செயல் திட்டத்தின் மேம்பாட்டை இந்தியா முன்னெடுத்துச் செல்கிறது என்று மத்திய மீன்வளத் துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிகி கூறியுள்ளார். இன்று (23.10.2026) உள்நாட்டு சிறு மீன்பிடித் தொழிலுக்கான இந்தியாவின் தேசிய செயல் திட்டத்தின் மேம்பாட்டுக் கட்டத்தை போபாலில் அவர் முறைப்படி தொடங்கி வைத்தார்.
போபாலில் நடைபெற்ற இரண்டு நாள் தேசியப் பயிலரங்கில், மீன்பிடி சமூகங்கள், பிற தரப்பினருடனான கலந்தாலோசனைகளும் இடம்பெற்றன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் அபிலக்ஷ் லிகி, நிலையான உள்நாட்டு மீன்பிடித் தொழிலுக்காக இந்தியா முன்மொழிந்துள்ள தேசிய செயல் திட்டத்தை நாடு முழுவதும் உள்ள மீன்பிடி சமூகங்களிடம் கொண்டு செல்ல, ஒரு மக்கள் தொடர்புத் திட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த ஆவணம் அரசு அலுவலகங்களுக்குள் முடங்கிக் கிடக்காமல், வாழ்வாதாரங்களில் நடைமுறை மேம்பாடுகளாக மாற வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327362®=3&lang=1
***
SK/PLM/SH