குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பஸ்தர் தசரா விழாவை முன்னிட்டு, சத்தீஸ்கரின் ஜக்தல்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்பு

இயற்கையைப் பேணிப் பாதுகாக்கும் பழங்குடியினரின் வாழ்க்கை முறையிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2026 4:29PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பஸ்தர் தசரா பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்டோபர் 23, 2026) சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், பஸ்தர் தசரா விழா, சத்தீஸ்கரின் கலாச்சாரப் பெருமை, நம்பிக்கை ஆகியவற்றின் உயிரோட்டமான சின்னமாக விளங்குகிறது என்றார். மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம், இப்பகுதி நக்சல் வன்முறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, முன்னேற்றப் பாதையில் வேகமாகச் செல்கிறது என அவர் தெரிவித்தார். இயற்கையைப் பேணிப் பாதுகாக்கும் பழங்குடியின சமூகத்தின் வாழ்க்கை முறையிலிருந்து நாம் மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, முரியா தர்பாரில் உள்ளூர் மஞ்சி, சால்கி மக்களுடன் கலந்துரையாடினார். மேலும், அவர் ஜக்தல்பூரில் உள்ள ரங்கோலி, தசரா கண்காட்சியையும் பார்வையிட்டார். முன்னதாக, ஜக்தல்பூரில் உள்ள அன்னை தந்தேஸ்வரி ஆலயத்தில் குடியரசுத் தலைவர் வழிபாடு செய்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327376&reg=3&lang=1

***

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2327539) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam