சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாப், ஹரியானாவில் காற்று மாசுக் கட்டுப்பாடு: செயல்திட்டத்தை தீவிரப்படுத்த 'சிஏகியூஎம்' உத்தரவு

இடுகை இடப்பட்ட நாள்: 22 OCT 2026 7:22PM by PIB Chennai

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் வைக்கோல் எரிப்பதைத் தடுப்பது மற்றும் காற்று மாசைக் கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது. தேசியத் தலைநகர் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின்  தலைவர் ராஜேஷ் வர்மா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

பயிர்க் கழிவு மேலாண்மை  இயந்திரங்களை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்குவது, ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பது மற்றும் வைக்கோல் மூலம் உயிரி எரிபொருள் உருளைகள் தயாரிக்கும் நடைமுறைகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டது. ஹரியானாவில் வாகனப் புகை, சாலை தூசி மற்றும் தொழிற்துறை மாசைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கி, காற்று மாசுபாட்டைத் தடுக்க மாவட்ட நிர்வாகங்கள் உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என ஆணையம் எச்சரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326828&reg=3&lang=1

****

SK/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2327460) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Punjabi , Urdu , हिन्दी