பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பீகார் மாநிலம், வைஷாலியில், படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 13 OCT 2026 11:57PM by PIB Chennai

பீகார் மாநிலம் வைஷாலியில், படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்தத் துயரமான தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக்கொண்ட பிரதமர், காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகக் கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும்   பிரதமர் அறிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

"பீகார் மாநிலம் வைஷாலியில் படகு கவிழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. இந்தத் துயரமான தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்."

****­

(Release ID: 2323046)

SS/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2327284) வருகையாளர் எண்ணிக்கை : 21