பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மும்பையில் உள்ள ரயில்வே மற்றும் நிதி அமைச்சகங்களின் கள அலுவலகங்களில் தூய்மைக்கான 'சிறப்பு இயக்கம் 6.0' செயல்பாடு குறித்த ஆய்வு

இடுகை இடப்பட்ட நாள்: 22 OCT 2026 4:47PM by PIB Chennai

மும்பையில் உள்ள ரயில்வே அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்தின் கள அலுவலகங்களில், தூய்மைப் பராமரிப்பிற்கான 'சிறப்பு இயக்கம் 6.0'-ன் செயல்பாடுகளை மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் செயலாளர் திருமதி நிவேதிதா சுக்லா வர்மா, அக்டோபர் 22, 2026 அன்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, தூய்மைப் பணிகள், இட மேலாண்மை, பயன்பாடற்ற ஆவணங்கள், பொருட்களை அகற்றுதல், அத்துடன் திறமையான, நிலையான பணிச்சூழலை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது.

சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் முனையத்தை பார்வையிட்ட அவர், அங்கு பயணிகளுக்கான வசதிகள், அதற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்தார். தூய்மைக்கான 'சிறப்பு இயக்கம் 6.0'-ன் ஒரு பகுதியாக, அவர் 'மக்கள் கலந்துரையாடல்' நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

 

இதில் பயணிகளுடன் கலந்துரையாடிய அவர், ரயில் நிலையத்தில் உள்ள வசதிகள், முதன்மை வழித்தட நடைமேடைகள், டிக்கெட் முன்பதிவு வசதிகள், பாரம்பரியக் கட்டிடம் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்தவும், ரயில்வே வளாகத்தைத் தூய்மையாகவும், நேர்த்தியாகவும், பயணிகளுக்கு உகந்த இடமாகவும் பராமரிக்க, கள அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை மதிப்பீடு செய்ய இந்த ஆய்வு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326655&reg=3&lang=1

(Release ID: 2326655)

****

SK/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2326884) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi