சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
22 OCT 2026 4:47PM by PIB Chennai
குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னதாக, தில்லி, அதனைச் சுற்றுயுள்ள பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச்சாலைகளில் காற்று மாசுக் கட்டுப்பாட்டு அமைப்புக்களை வலுப்படுத்தும் வகையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாசுபாட்டுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்து, உபகரணங்கள், மனிதவளம் மற்றும் நீர் தெளித்தல் ஆகியவற்றின் முழுமையான பயன்பாடு, புகை தடுப்புத் துப்பாக்கிகளின் வழக்கமான செயல்பாடு, உபகரணங்களின் அன்றாடப் பராமரிப்புப் பணிகள் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று களப பணியாளர் குழுக்களுக்கு என்ஹெச்ஏஐ-யின் உறுப்பினர் (தொழில்நுட்பம்) திரு அலோக் தீபங்கர் அறிவுறுத்தினார்.
தில்லி-என்சிஆர் பகுதியில் காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தால் நிறுவப்பட்ட விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கட்டுமானப் பொருட்களை மூடுதல், சாலை மேற்பரப்புகளில் தூசி படியாமல் பராமரித்தல், பொருந்தக்கூடிய நிலை அடிப்படையிலான செயல்திட்டத்தின் தரநிலைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் தீவிர நடவடிக்கைகள் ஆகியவை இதில் அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326657®=3&lang=1
(Release ID: 2326657)
****
SK/SV/SH