சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
22 OCT 2026 5:03PM by PIB Chennai
தூய்மைப் பணியாளர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறும், நலத்திட்டங்கள் மற்றும் அரசுத் திட்டங்கள் தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளையும் சென்றடைவதை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறும், தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் கேட்டுக்கொண்டார்.
புதுதில்லியில் அக்டோபர் 22, 2026 அன்று 'தேசிய துப்புரவுத் தொழிலாளர் ஆணைய அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்வு, மறுவாழ்வு, பாதுகாப்பு மற்றும் சமூக-பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றில் மத்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டை அவர் வலியுறுத்தினார்.
இதில் கண்ணியமான பணிச்சூழல், இயந்திரமயமாக்கல் மற்றும் தொடர்புடைய நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று திரு வீரேந்திர குமார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326666®=3&lang=1
(Release ID: 2326666)
****
SK/SV/SH