பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற முகமது பசிலுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2026 7:37PM by PIB Chennai

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில்  ஆடவர் 100 மீட்டர் டி47 பிரிவில்,  வெள்ளிப் பதக்கம் வென்று சிறந்து விளங்கிய எம். முகமது பசிலுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

தகுதிச் சுற்றுகளில் சாதனையை முறியடித்ததும், இறுதிப் போட்டியில் தனது சொந்த சாதனையை மேம்படுத்தியதும், அவரது திறமைக்கும் மனவுறுதிக்கும் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும் என்று குறிப்பிட்ட திரு மோடி, பசிலின் இந்த மறக்கமுடியாத செயல்பாட்டைப் பாராட்டினார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

 

"2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 100 மீட்டர் டி47  பிரிவில் எம். முகமது பசில், வெள்ளிப் பதக்கத்தை வென்று தனி முத்திரை பதித்துள்ளார். தகுதிச் சுற்றிலேயே விளையாட்டுப் போட்டிக்கான சாதனையை முறியடித்த அவர், இறுதிப் போட்டியில் தனது சொந்த சாதனையை மேலும் மேம்படுத்தினார். இது அவரது திறமைக்கும் மனவுறுதிக்கும் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த மறக்க முடியாத செயல்பாட்டிற்காக பேசிலுக்கு எனது பாராட்டுகள்: பிரதமர் @narendramodi"

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326140&reg=3&lang=1

***

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2326830) வருகையாளர் எண்ணிக்கை : 9