கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

65-வது தேசிய கலைக் கண்காட்சி மற்றும் 3-வது இந்திய அச்சுக்கலை விருதுகளை வழங்கினார் குடியரசுத்தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2026 7:01PM by PIB Chennai

மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் லலித் கலா அகாடமி, புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த 65-வது தேசிய கலைக் கண்காட்சி மற்றும் 3-வது இந்திய அச்சுக்கலை ஈராண்டு நிகழ்வின் விருது வழங்கும் விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், செயலாளர் திரு விவேக் அகர்வால், மூத்த அதிகாரிகள், கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இந்தியாவின் வளமான, பன்முகத்தன்மை கொண்ட கலைப் பாரம்பரியத்தை எடுத்துரைத்தார். கலையை, ஒரு நாட்டின் கலாச்சாரம், மரபுகள், நாகரிகப் பயணத்தின் கண்ணாடி என்று அவர் வர்ணித்தார். பாரம்பரிய கலை வடிவங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், கலை வெளிப்பாட்டின் ஒரு குறிப்பிடத்தக்க மரபாக அச்சுக்கலையை சுட்டிக்காட்டினார். இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம், சமகால காட்சி கலைகளுக்குக் கலைஞர்கள் ஆற்றிய சிறப்பான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விழா அமைந்திருந்தது. இந்த நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326116&reg=3&lang=1

***

SK/BR/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2326698) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi