இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 7:05PM by PIB Chennai
இந்திய-பிரேசில்-தென்னாப்பிரிக்க கடல்சார் கூட்டுப் பயிற்சியின் ஒன்பதாவது பதிப்பு, 2026 அக்டோபர் 20 அன்று தென்னாப்பிரிக்காவின் சைமன்ஸ் டவுனில் நிறைவடைந்தது. இந்தப் பயிற்சியில் இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்க கடற்படைகள் பங்கேற்றன. மூன்று நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான செயல்பாட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், கூட்டுச் செயல்பாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பரஸ்பர புரிதலை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, பல்வேறு தொழில்முறை கலந்துரையாடல்களும் கடல்சார் பயிற்சிகளும் இதில் மேற்கொள்ளப்பட்டன.
துறைமுகம், கடல்சார் பயிற்சிகளின் போது மேற்கொள்ளப்பட்ட பத்து நாள் கூட்டு நடவடிக்கைகளின் உச்சக்கட்டமாக நிறைவு விழா அமைந்திருந்தது. இதில் பங்கேற்ற வீரர்கள், தொழில்முறை கருத்துப் பரிமாற்றங்கள், செயல்பாட்டு ரீதியான தொடர்புகள், கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். இத்தகைய செயல்பாடுகள், மூன்று நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்ல புரிதலை ஏற்படுத்தியதுடன், கடல்சார் சூழலில் வீரர்கள் இன்னும் மேம்பட்ட ஒருங்கிணைப்புடன் இணைந்து செயல்படுவதற்கும் வழிவகை செய்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326117®=3&lang=1
***
SK/BR/SU