பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ட்ரோன் அமைப்புகளுக்கான செயல்திட்டம் குறித்து தொழில் துறையினருடன் விமானப்படை கலந்துரையாடல்

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2026 8:29PM by PIB Chennai

ஆளில்லா, தானியங்கி ட்ரோன் விமான அமைப்புகள் துறையில் இந்திய விமானப்படையின் நீண்டகாலத் திறன் தேவைகளைப் பகிர்ந்துகொள்வதற்காக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடும் நோக்கில், இந்திய விமானப்படை இன்று (2026 அக்டோபர் 21) புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் தொழில் துறையினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு விமானப்படைத் தலைமையகத்தின் ஆயுதப் பிரிவு தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் பிரேம்குமார் தலைமை வகித்தார். பல்வேறு ட்ரோன் நிறுவனங்கள், அதனுடன் இணைந்த தொழில் துறைகளைச் சேர்ந்த சுமார் 100 பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

2026 செப்டம்பர் 14 அன்று பொக்ரானில் நடைபெற்ற விமானப்படை ட்ரோனத்தான் நிகழ்வின்போது வெளியிடப்பட்ட, ஆளில்லா, தானியங்கி அமைப்புகளுக்கான செயல்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்திய விமானப்படை தனது செயல்பாட்டுத் தேவைகளையும் தொழில்நுட்ப முன்னுரிமைகளையும் வெளிப்படுத்துவதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு தளத்தை வழங்கியது. இன்றைய நிகழ்வில், இந்திய விமானப்படை தனது எதிர்காலத் தேவைகளை விளக்கியது. அது மட்டுமல்லாமல், விமானப்படை இத்துறையில் தனது செயல்திட்டம் தொடர்பான கையேட்டையும் தொழில் துறையினருக்கு விநியோகித்தது.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326184&reg=3&lang=1 :

***

SK/PLM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2326661) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , हिन्दी