சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டம் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2026 4:18PM by PIB Chennai

ஆராய்ச்சி மாணவர்கள் பொருளாதாரத் தடைகளைக் கடந்து உயர் கல்வியைத் தொடர நிதியுதவி முக்கியப் பங்காற்றுகிறது.

தெலங்கானாவின் ஹனுமகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர் திரு அர்ஜூன் குமாரின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பயணம் ஷெட்யூல்டு மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் ஆதரவு மாணவர்கள் தங்களுடைய ஆராய்ச்சியைத் தொடரவும், கல்விச் சார்ந்த விருப்பங்களை நோக்கி செயல்படவும் எவ்வாறு உதவுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. 

பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த திரு அர்ஜூன் குமார் தமது உயர் கல்வியைத் தொடரும்போது பெரும் பொருளாதார, சமூகத் தடைகளை எதிர்கொண்டார். குறைந்த அளவிலான நிதி ஆதாரங்கள் அவர் தன்னுடைய படிப்பைத் தொடருவதற்கும், ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கும் கடினமாக இருந்தது.

இந்நிலையில், 2022-ம் ஆண்டு ஷெட்யூல்டு மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித் தொகை அவருடைய ஆராய்ச்சி படிப்பிற்கு உதவியாக இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326007&reg=3&lang=1   

***

SK/IR/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2326656) வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu