சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 4:00PM by PIB Chennai
அரசின் கலப்புத் திருமண ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் உரிய நேரத்தில் வழங்கப்படும் ஆதரவு தம்பதிகளுக்கு எவ்வாறு சிறந்த நம்பிக்கையுடனும், ஸ்திரத்தன்மையுடனும் அவர்களுடைய திருமண வாழ்க்கையைத் தொடங்க உதவுகிறது என்பதை மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த ஒரு தம்பதியின் பயணம் விளக்குகிறது.
கலப்புத் திருமணம் என்பது இரண்டு தனி நபர்கள் இணைவதை விட மேலானதாக சமத்துவம், நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் மாண்புகளை பிரதிபலிக்கிறது.
திரு கெய்க்வாட், திருமதி மோர் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெயருடைய தம்பதி திருமணத்திற்குப் பிறகு, தங்களுடைய வீட்டுச் செலவுகளுக்காகவும், எதிர்காலத்தைத் திட்டமிடுவதிலும், நிதிச் சார்ந்த சவால்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், சமூக நலத்துறை மூலம் மகாராஷ்ட்ரா அரசு அமல்படுத்திய கலப்புத் திருமண ஊக்குவிப்பு திட்டம் அவர்களுக்கு சிறந்த ஆதரவாக அமைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325991®=3&lang=1
***
SK/IR/SU