பிரதமர் அலுவலகம்
பணிவு, தொடர்ச்சியான கற்றல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
22 OCT 2026 7:49AM by PIB Chennai
சிறிய வெற்றியில் பணிவுடன் இருத்தலின் முக்கியத்துவம் குறித்தும், தொடர்ச்சியாக கற்றுக்கொண்டு வளர்ச்சியடைவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியுள்ளார்:
சந்திரன் இல்லாத போது மட்டுமே மின்மினிப்பூச்சி பிரகாசமாக காட்சியளிக்கும். ஆனால் சூரியன் உதிக்கும் போது, மின்மினிப்பூச்சியின் பிரகாசத்தையோ, சந்திரனையோ காண முடிவதில்லை. அதேபோல், சிறிய சாதனையின் முக்கியத்துவம் அதைவிட பெரிதான ஒரு சாதனை வரும் வரை மட்டுமே நீடிக்கும். அதனால் ஒருவர் சிறிய வெற்றிகளின்போது, கர்வமடையாமல் பணிவுடன் இருந்து, தொடர்ந்து கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326359®=3&lang=1
***
SS/IR/RJ/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2326463)
வருகையாளர் எண்ணிக்கை : 4