உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாபின் லூதியானாவில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 20 OCT 2026 7:47PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இன்று பஞ்சாபின் லூதியானாவில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் கலந்துகொண்டார். அப்போது, போதைப்பொருளைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ராவண உருவபொம்மையை அவர் தீவைத்து எரித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பஞ்சாபில் போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் மகன்களை இழந்த மூன்று குடும்பத்தினரை தாம் சந்தித்ததாகக் கூறினார். பஞ்சாப் அரசு ஒரு கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைத்துள்ளதாகக் குறிப்பிட்ட திரு ஷா, மற்ற இரண்டு கொலை வழக்குகளின் விசாரணையையும் சிபிஐ-யிடம் ஒப்படைக்குமாறு பஞ்சாப் அரசை வலியுறுத்தினார். இந்த வழக்குகளில் நிச்சயம் நீதி கிடைக்கும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். விசாரணை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்ட பின், இந்தக் கொலைகளில் சம்பந்தப்பட்டவர் யாராக இருந்தாலும், திரு மோடி அரசு அவர்களைக் கண்டுபிடித்து சிறையில் அடைக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

2029 டிசம்பர் 31-க்குள் பஞ்சாப் மாநிலத்தை போதைப்பொருள் வணிகத்திலிருந்து முழுமையாக விடுவித்து, போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று உறுதியேற்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சூளுரைத்தார். போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த மூன்று பேருக்கு இதைவிடச் சிறந்த அஞ்சலி வேறொன்றும் இருக்க முடியாது என்று அவர் தெரிவித்தார். போதைப்பொருள் வணிகம் குறித்த தகவல்களை மாநில மக்கள் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் கட்டணமில்லா உதவி எண்ணிற்குத் தெரிவித்தால், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று திரு அமித் ஷா கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325520&reg=48&lang=2

***

AD/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325967) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati