பிரதமர் அலுவலகம்
காவலர் நினைவு தினத்தையொட்டி துணிச்சல் மிக்கக் காவலர்களுக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 8:23AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி காவலர் நினைவு தினத்தையொட்டி சட்டம் ஒழுங்கை பராமரித்தல், குற்றச் செயல்களை தடுத்தல், அவசர நிலைகளில் விரைவாக செயல்படுதல், மிகவும் சவால்மிக்க சூழல்களில் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றில் அவர்களுடைய அளப்பரிய பங்களிப்பை அங்கீகரித்து, அனைத்து காவல் துறையினருக்கும் தமது நன்றியை தெரிவித்துள்ளார்.
தாங்கள் கடமையாற்றும்போது உயிரை தியாகம் செய்த துணிச்சல் மிக்கக் காவல் துறையினருக்கு மரியாதை செலுத்தியுள்ள திரு மோடி அவர்களுடைய துணிச்சல், அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவை நாட்டின் நினைவில் என்றும் இடம் பிடித்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:
"காவலர் நினைவு தினம் என்பது மிகவும் சவால்மிக்க சூழல்களில் மிக அர்ப்பணிப்புடன் சேவையாற்றக்கூடிய நமது காவல் துறையினருக்கு நம்முடைய நன்றியைத் தெரிவிக்கும் நாளாகும். சட்டம் ஒழுங்கை பராமரிப்பது முதல் குற்றச் செயல்களை தடுப்பது வரையிலும் அவசர நிலைகளில் விரைந்து செயல்படுவது முதல் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது வரையிலும் அவர்களுடைய பங்களிப்பு அளப்பரியது.
தாங்கள் கடமையாற்றும்போது உயிரை தியாகம் செய்த துணிச்சல் மிக்கக் காவல் துறையினருக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். அவர்களுடைய துணிச்சல், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவை நமது நாட்டின் நினைவில் என்றும் இடம் பெற்றிருக்கும்".
***
(Release ID: 2325655)
SS/IR/SU/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2325859)
வருகையாளர் எண்ணிக்கை : 8