பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், மகளிர் 1500 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராதா வெங்கடேஷுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 19 OCT 2026 10:20PM by PIB Chennai

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், மகளிர் 1500 மீட்டர் டி12/13 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராதா வெங்கடேஷுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது சாதனை குறித்து பெருமிதம் தெரிவித்துள்ள திரு நரேந்திர மோடி, இந்தியா அவரது வெற்றியைக் கொண்டாடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்காலத்தில் அவர் இன்னும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

ராதா வெங்கடேஷ் அற்புதமான சாதனை படைத்துள்ளார். 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், மகளிர் 1500 மீட்டர் டி12/13 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவரை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன். இந்தியா அவரது வெற்றியைக் கொண்டாடுகிறது. எதிர்காலத்தில் அவர் இன்னும் பல சாதனைகளைப் படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

***

(Release ID: 2325320)

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325473) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Kannada