சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இன்று முதல் நவம்பர் 8 வரை நாடு தழுவிய பசுமை தீபாவளி இயக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 20 OCT 2026 10:48AM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆதரவுடன், உலகளாவிய இயற்கை நிதியத்தின் இந்தியாவின் திட்ட மையம், மிஷன் லைஃப் எனப்படும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கத்திற்கு இணங்க, பட்டாசுகளைத் தவிர்த்து, தூய்மையான, பசுமையான தீபாவளியைக் கொண்டாடுமாறு மக்களை வலியுறுத்தி, இன்று (20.10.2026) முதல் 08.11.2026 வரை நாடு தழுவிய பசுமைத் தீபாவளி இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்த இயக்கம், தேசிய தூய்மை காற்றுத் திட்டத்தின் கீழ் உள்ள 130 நகரங்களில் சிறப்பு கவனம் செலுத்துகிறது.  பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், உள்ளூர் சமூகங்களிடையே இதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 

 

இந்தப் இயக்கத்தின் ஒரு பகுதியாக, பட்டாசுகளைத் தவிர்ப்பது, குடும்பத்தினரையும் அண்டை வீட்டாரையும் அவ்வாறே செய்ய ஊக்குவிப்பது, அகல்விளக்குகள், மின்சாரம் சேமிக்கும் விளக்குகளைப் பயன்படுத்துவது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பது, கழிவுகளைத் தரம் பிரிப்பது, உள்ளூர் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது போன்ற பசுமைத் தீபாவளி உறுதிமொழிகளை எற்குமாறு மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். கல்வி நிறுவனங்களும் சமூகக் குழுக்களும், பொதுக்கூட்டங்கள், வகுப்புகள், பேரணிகள் மற்றும் சமுதாயக் கூட்டங்களின் போது உறுதிமொழி இயக்கங்களை ஏற்பாடு செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகின்றன.

 

மக்கள் தங்களின் அன்றாடச் செயல்பாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கும், நிலையான பழக்கவழக்கங்களைக் கண்டறிவதற்கும், கார்பன் தட ஆய்வில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்தக் ஆய்வு பின்வரும் இணைப்பில் நடைபெறுகிறது: https://wwfindiawebgis.in/Carbon_Footprint/Carbon_Footprint.html

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325381&reg=48&lang=1

(Release ID : 2325381)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2325448) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , Bengali , English , Gujarati , Urdu , हिन्दी , Marathi