இடுகை இடப்பட்ட நாள்:
17 OCT 2026 10:54PM by PIB Chennai
‘மை பாரத்’ மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான 100 வார கால போதைப் பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தின் இரண்டாவது மாதத்தை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 16, 2026 அன்று நாடு முழுவதும் யோகா மற்றும் தற்காப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த இயக்கம், தற்போது இரண்டாவது மாதத்தில் ‘ஆரோக்கியமான இளைஞர்கள், போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள்’ என்ற கருப்பொருளுடன் முன்னெடுக்கப்படுகிறது. இது உடல் ஆரோக்கியம், மன உறுதி, ஒழுக்கம், தன்னம்பிக்கை ஆகியவற்றை மையமாகக் கொண்டு, போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, 332 யோகா அமர்வுகள் நடத்தப்பட்டன; இதில் 19,882 பெண்கள் உட்பட மொத்தம் 34,290 பேர் பங்கேற்றனர். மேலும், 311 தற்காப்புக் கலை செயல்முறை விளக்கங்கள் மூலம் 18,364 பெண்கள் உட்பட 31,507 பேர் பயனடைந்தனர். இவை தவிர, சமூக விழிப்புணர்வுக்கான 180 நிகழ்வுகள் நடத்தப்பட்டன. யோகா அமர்வுகளில், உடல் ஆரோக்கியம் மற்றும் மன அழுத்த மேலாண்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், பொது யோகா நெறிமுறைகளும் தளர்வு நுட்பங்களும் இடம்பெற்றிருந்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324826®=3&lang=1
***
TV/RB/RJ